இந்த வார நட்சத்திரம் செயல்படும் முறை, கூடுதல் தகவல்கள

யார், யாரால், எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகியால் உலகளாவிய தமிழ்வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் எழுதிவரும் ஒரு வலைப்பதிவர் இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

தமிழ்மணம் வலைவாசல் வழியாக இந்த ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்படும்வரை http://valaippoo.blogspot.com http://valaippoo.yarl.net ஆகிய வலைப்பதிவுகள் வாயிலாக செயற்பாட்டில் இருந்தது. தமிழ்மணம் வலைவாசல் வழியாக செயல்படத் தொடங்கியபின்னர் நட்சத்திரமாக மின்னியவர்களின் பட்டியல் இங்கே கிடைக்கும்: http://www.thamizmanam.com/tamilblogs/old_stars.php

இதனால் என்ன பயன்?

நட்சத்திர வலைப்பதிவருக்கு வழக்கமாகக் கிடைக்கும் கவனத்தைவிட அதிகமாக விசேஷ கவனம் இதன் மூலம் அளிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான வலைப்பதிவர்களில் ஒருவராக தான் எழுதுவது எல்லாராலும் கவனிக்கப்படாமல் போகாமல் சிறப்பு கவனம் அளிக்கப் படுவதால், அந்த வலைப்பதிவைப் பற்றியும், வலைப்பதிவரைப் பற்றியும் புதிதாக பலரும் அறிந்துகொள்ள, அதன் மூலம் தகுந்த ஊக்கம் பெற இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த ஏற்பாடு நடைமுறைப்படுத்தப் படுகிறது.

இப்படி முன்னிறுத்தப்படுவர் எடுக்கவேண்டிய அணுகுமுறை?

தன் திறமைகளை வெளிக்காட்ட கிடைத்த வாய்ப்பாக இதை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம். வலைப்பதிவு நுட்பம், வலைப்பதிவர் சமூகம் இவற்றின் வளர்ச்சி, சமகால நிலை, ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், மற்ற வலைப்பதிவர்கள் விவாதிக்க ஒரு மேடை அமைத்துக்கொடுக்கவும் முயலலாம். இன்னும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப செய்யலாம்.

நானும் ஒரு வாரத்துக்கு நட்சத்திரமாக இருக்க என்ன செய்யவேண்டும்?

தொடர்ந்து நல்லமுறையில் எழுதிவருபவர்கள் கட்டாயம் இங்கே முன்னிறுத்தப்படுவார்கள்.

இந்த வார நட்சத்திரங்கள் தங்கள் வலைப்பதிவுகளில் கடைப்பிடிக்கவேண்டிய தொழில்நுட்ப/நடைமுறை ஒழுங்குகள் எதாவது?

ஆம், இருக்கின்றன:

  1. பதிவு யுனிகோடில் இருக்கவேண்டும்
  2. அவர் தன்னைப்பற்றிய ஒரு அறிமுகத்தை தரவேண்டும். பெயர்/இருப்பிடம் துல்லியமாக சொல்லாவிட்டாலும் ஓரளவுக்கு தங்கள் வயது, கல்வி, பணி, பின்புலம், எழுத்து/வாசிப்பு அனுபவம் ஆகியன வரும்படி அறிமுகம் தரவேண்டும். இவற்றை ஒரு இணையப்பக்கத்தில் ஏற்றிவிட்டு சுட்டியைக் கொடுப்பது நல்லது.
  3. முடிந்தவரை அறிமுகத்தோடு நிழற்படம் கொடுத்தல் நல்லது. விருப்பமில்லாதவர் அவராக ஒரு கார்ட்டூன்/மலர் என்று ஏதாவது ஒரு படத்தை தேர்ந்தெடுக்கலாம் (நிழற்படத்துக்கு பதிலாக பயன்படுத்த). நிழற்படமோ/வேறோ அவராகவே வலையேற்றிவிட்டு சுட்டியை அனுப்பவேண்டும். இதற்கு http://www.tinypic.com போன்ற இலவச சேவைகளைப் பயன்படுத்தலாம். இந்தப் படங்கள் 300 பிக்செல் அகலத்துக்கும் சிறியதாக இருக்கவேண்டும்
  4. தங்கள் வலைப்பதிவில் செய்தியோடையில் முழு வலைப்பதிவும் வெளியாகுமாறு அமைப்பிக்க வேண்டும். (For example, in blogger.com settings, Settings→Sitefeed→Description→Full.) இது மிக முக்கியம் இது தமிழ்மணம் வாசகர் பக்கத்தில் சில பத்திகளாவது காட்ட ஏதுவாக இருக்கும்.
  5. மேலும் வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் தெரியக்கூடியதாக இருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஒரு நாளில் எழுதுவது அனைத்தும் முகப்பில் தெரியும்படியாவது இருக்கவேண்டும்.
  6. தமிழ்மணம் தளத்தில் மாற்றம் அமெரிக்க கிழக்கு நேரப்படி (EST) ஞாயிறு-திங்கள் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். அவர் தன் முதல் சிறப்பு இடுகையை அந்த நேரத்தை ஒட்டி இடுவது நன்றாக இருக்கும்.
  7. அதேபோல நன்றி/விடைபெறும் செய்தி இருப்பின் தன் சிறப்பு வாரம் முடிவதற்கு குறைந்தது 12 மணிநேரத்துக்கு முன் இட்டுவிட்டாலே பலரையும் அது சென்றடையும்.
  8. ஒரு நாளில் குறைந்தது ஒரு முறையாவது எழுதவேண்டும். ஒரே நாள் பல இடுகைகள் எழுதினால் கடைசியாக எழுதுவது சிறிய இடுகையாக இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. வெறும் படங்கள், அல்லது ஓரிருவரிக் கவிதைகள் நாளின் கடைசியாக இட்டால், நீண்ட அளவில் வாசகர் பக்கத்தில் வராதாகையால், எதிர்பார்க்கும் கவனம் கிட்டாமல் போகலாம்.
 
  star_of_the_week.txt · கடைசியாக மாற்றப்பட்டது: 2007/04/01 10:20
 

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy
Valid XHTML 1.0!